எரி­பொருள் விநி­யோக குள­று­ப­டிக்கு இந்­தி­யாவை குறை கூறு­வதில் பய­னில்லை-மனோ கணேசன்

412 0

நாட்டில் இன்று ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் நெருக்­க­டிக்கு, பொது எதி­ர­ணி­யினர், இந்­தி­யாவை குறை கூறு­வது, தும்பை விட்டு வாலை பிடிப்­பது போன்­ற­தாகும். இதை­விட பொது எதி­ரணி தலைவர், தன் வழ­மை­யான திருப்­பதி யாத்­தி­ரையின் போது இது­பற்றி இந்­திய கட­வு­ளிடம் முறை­யீடு செய்­யலாம்.

எரிபொருள் உண்­மையில், எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும், 21 நாட்­க­ளுக்கு தேவை­யான எரி­பொ­ருளை எப்­போதும் சேமித்து வைத்­தி­ருக்கும் வழ­மையை இம்­முறை கடை­ப்பி­டிக்க தவ­றி­ய­மையே, இன்­றைய சிக்­க­லுக்கு பிர­தான கார­ண­மாக அமைந்­துள்­ளது.

நாட்டின் அதி­க­மான தனியார், பொது வாக­னங்கள் மற்றும் முச்­சக்­கர வண்­டிகள் ஓடும் கொழும்பு மாவட்டத்தின் பிரதிநிதி என்ற முறையில் இது தொடர்பில் தொல்­லை­களை சந்­தித்­துள்ள மக்­க­ளிடம் என் வருத்­தங்­களை தெரி­வித்­துக்­கொள்­கிறேன். என ஜன­நா­யக மக்கள் முன்­னணி தலைவர், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறி­யுள்ளார்.

Leave a comment