வீரவங்சவின் தலைவர் மஹிந்தவை வரச் சொல்லுங்கள்- அனுரகுமார பகிரங்க அழைப்பு

377 0

வீரவங்சவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேருக்கு நேர் விவாதத்துக்கு தயார் எனவும், வீரவங்சவுடன் விவாதிப்பதற்கு ஜே.வி.பி.யின் தலைவர் வரவேண்டியதில்லையெனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரை பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு அண்மையில் ஊடகமொன்றில் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து குறிப்பிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

விமல் வீரவங்ச அவருடன் விவாதத்துக்கு வரவேண்டும் என அடம்பிடிப்பதாயின் ஜே.வி.பி.யின் தலைவர் செல்ல வேண்டியதில்லை. அவருக்கு நிகராக வேறு ஒருவரையே கட்சியிலிருந்து அனுப்புவோம் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment