அவிசாவலை புகையிரத நிலையத்தில் இரண்டு இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பில் அங்குள்ள இரண்டு புகையிரத பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புகையிரத நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் தண்டவாள மார்க்கத்தை மாற்றியமைக்கும் ஊழியர் ஆகியோரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

