ஜனாதிபதியுடன் கலந்துரையாட ஒன்றிணைந்த எதிர்கட்சி நிபந்தனை

390 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி நிபந்தனை விதித்துள்ளது.
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது ஐக்கிய தேசிய கட்சி என்ற கொள்கையில் இருந்து விடுப்பட்டு தனியான சுதந்திர கட்சியின் கொள்கையுடன் தேர்தலில் போட்டியிடுமாயின் தாம் அதற்கு ஆதரவளிப்பதற்கு தயாராக இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமாயின் அதற்கான அடிப்படை தளம் ஒன்று இருக்க வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் இருதரப்பினரதும் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்திப்பொன்று எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்புக்கு ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, தாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்குகொள்ள வேண்டுமாயின் இவ்வகையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment