மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் கைது!

404 0

மனைவிக்கு பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட நிலையில் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்றைய தினம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

நீர்கொழும்பில் வசிக்கும் 34 மூர்த்தி லோகேஸ்வரி என்ற பெண்ணை தொடர்ச்சியாக அவரின் கணவரான ஜுட் குமார என்பவர் சித்திரவதைக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 30 ஆம் திகதி மூர்த்தி லோகேஸ்வரியுடன் ஏற்பட்ட குடும்ப தகராற்றின் போது பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார்.

அயலவர்களால் தீயணைக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 41 வயதான ஜுட் குமார கைது செய்யப்பட்டுள்ளதுடன், மனைவியின் சடலம், பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தெர்டர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment