இராஜகிரிய – களபலுவாவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் குறித்த வீட்டில் வசித்த 83 வயதுடைய வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரழந்துள்ளார்.
குறித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அவரின் மகளும் வீட்டில் வசித்துள்ள நிலையில், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
எனினும் 52 வயதுடைய குறித்த மகள் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

