வடக்கு தொடரூந்து சேவை நாவற்குழி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

429 0

பாலம் ஒன்றை சீரமமைக்கும் நடவடிக்கை காணரமாக இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, 5 நாட்கள், வடக்கு தொடரூந்து சேவையின் நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணம் வரையான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

தொடரூந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நாவற்குழி வரை மாத்திரமே தொடரூந்து சேவை இடம்பெறும் என தொடரூந்து கண்காணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பயணிகளின் நன்மை கருதி மாற்று சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பிலிருந்து அனைத்து புகையிரத சேவைகளையும் நாவற்குழியில் மட்டுபடுத்தி அவர்களை பேருந்து மூலம் யாழ் புகையிரத நிலையத்திற்கு அழைத்துச் சென்று, யாழ் புகையிரத நிலையத்திலிருந்து விசேட புகையிரத சேவை மூலமாக காங்கேசன் துறைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணம் அறவிடப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காங்கேசன் துறையில் நான்கு விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளது.

விசேட சேவை இலகக்கம் 01

காங்கேசன் துறையிலிருந்து அதிகாலை அதிகாலை 5.00 மணிக்கு புறப்படும் புகையிரத சேவை யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அதிகாலை 5.26 சென்றடைந்தவுடன் பேருந்தின் மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு பயணிகள் அழைத்துச்செல்லப்படுவார்கள் எனவும், நாவற்குழியிலிருந்து அதிகாலை 6.16 இற்கு குறித்த புகையிர சேவை கொழும்பு புறக்கோட்டையை நோக்கி புறப்படும்.

விசேட சேவை இலகக்கம் 02

காங்கேசன் துறையிலிருந்து முற்பகல் 8.20 அளவில் புறப்படும் புகையிரத சேவை யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு முற்பகல 8.46 சென்றடைந்தவுடன் பேருந்தின் மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு பயணிகள் அழைத்துச்செல்லப்படுவார்கள் எனவும் நாவற்குழியிலிருந்து முற்பகல் 9.45 அளவில் குறித்த புகையிர சேவை கொழும்பு புறக்கோட்டையை நோக்கி புறப்படும்.

விசேட சேவை இலகக்கம் 03

காங்கேசன் துறையிலிருந்து பிற்பகல் 12.50 அளவில் புறப்படும் புகையிரத சேவை யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு பிற்பகல் 1.16 இற்கு சென்றடைந்தவுடன் பேருந்தின் மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு பயணிகள் அழைத்துச்செல்லப்படுவார்கள் எனவும் நாவற்குழியிலிருந்து பிற்பகல் 2.12 அளவில் குறித்த புகையிர சேவை கொழும்பு புறக்கோட்டையை நோக்கி புறப்படும்.

விசேட சேவை இலகக்கம் 04

காங்கேசன் துறையிலிருந்து மாலை 5.45 அளவில் புறப்படும் புகையிரத சேவை யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு மாலை 6.11 இற்கு சென்றடைந்தவுடன் பேருந்தின் மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு பயணிகள் அழைத்துச்செல்லப்படுவார்கள் எனவும் நாவற்குழியிலிருந்து மாலை 7.11 அளவில் குறித்த புகையிர சேவை கொழும்பு புறக்கோட்டையை நோக்கி புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment