ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிக்கு தாக்குதல் நடத்திய இருவர் விளக்கமறியலில்

363 0

கொழும்பு மலலசேகர வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற வைபவமொன்றின் போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் குறித்த பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மற்றும் இராணுவ அதிகாரி ஒருவரை எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; கடந்த 7ம் திகதி ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மதுபானம் அருந்திய நிலையில் பாட்டு பாடியுள்ளனர். இவ்வேளை பாடலை நிறுத்துமாறு பாதுகாப்பு பொறுப்பதிகாரி கால்லகே சமந்த ஜயசுந்தர குறித்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட தகராறில் குறித்த அதிகாரிகள் பாதுகாப்பு பொறுப்பதிகாரி மீது கதிரையால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்படி குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் கான்ஸ்டபிள் நுவன் செனவிரத்ன மற்றும் இராணுவ வீரர் என்.முத்துநாயக ஆகியோர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment