இளவயது பாடசாலை மாணவிகள் நால்வருக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் குறித்த ஆசிரியரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கெக்கிராவை மாவட்ட நீதிபதி துலான் வீரரத்ன உத்தரவிட்டுள்ளார்.
கல்னேவ நேகம்பஹ பகுதியை சேர்ந்த 57 வயதுடைய பாடசாலை ஆசிரியர் ஒருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

