மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பிலான பிரச்சினைக்கான இறுதி தீர்மானம் இவ்வார இறுதியில் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சைட்டம் தொடர்பிலான பிரச்சினைக்குச் சாதகமான தீர்வு கிடைக்காவிடின் அதற்கு எதிராகச் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரச பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் 250 பேர் கொண்ட பெற்றோர் குழாம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான இறுதி தீர்மானம் இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என அண்மையில் ஜனாதிபதி மைத்ரிபால தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

