மக்களுக்காகவே அதிகாரம் பகிரப்படுகிறது- ஜனாதிபதி

323 0

மக்களுக்காகவே அதிகாரம் பகிரப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

அபிவிருத்தியும் அரசியல் சீர்த்திருத்தமுமே அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்த நாடு பிளவுபடாத தீர்வொன்றை நோக்கி பரினமிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது.

எனினும், சிலர் இது தொடர்பில் பொய்யான பிரச்சாரங்களை செய்துவருகின்றனர்.

ஊடகங்களில் பொய்யான தகவல்கள் வெளியாகிவருகின்றன.

தெற்கில் மக்களை தவறாக வழிநடத்துவதற்கான பிரச்சாரங்கள் இடம்பெறுகின்றன.

இந்த விடயத்தில் எதிர்ப்பினை வெளியிடுகின்றவர்கள் இந்த பிரச்சினையின் கஷ்டம் தொடர்பில் தெளிவுபெற வேண்டும்.

யுத்தத்தினால் பிளவுபடுத்த முடியாத நாட்டை அரசியல் அமைப்பு ஒன்றினால் பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்துகின்றவர்களின் கருத்துகளை முற்று முழுதாக நிராகரிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டிற்கு எதிராக நிற்கின்றவர்கள் அதற்கு மாற்றுவழியாக தமது கருத்துக்களை முன்வைப்பதில்லையென குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment