புதிய அரசியலமைப்பு தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் செயற்குழு வெளியிட்ட அறிக்கை இரண்டு பீடங்களின் மகாநாயக்கர்களின் ஒப்புதலுடனேயே வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்கிரிய பீடத்தின் செயலாளர் மெதகம ஸ்ரீ தம்மாநந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு தேவையில்லை என மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் செயற்குழு அண்மையில் அறிக்கை வெளியிட்டது.
குறித்த அறிக்கை, மல்வத்து மகாநாயக்கர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே வெளியிட்டப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டி, ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்தநிலையிலேயே அஸ்கிரிய பீடத்தின் செயலாளரின் கருத்து வெளியாகியுள்ளது.
மகா சங்கத்தினர் அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் இல்லை.
அவர்கள் புதிய அரசியலமைப்புக்கே எதிரானவர்கள்.
எனவே புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்பது தொடர்பில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகள் தமது பௌத்தபீடங்களினால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தம்மாநந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

