இந்தியாவில் இருந்து மாலைத்தீவு நோக்கி பயணித்த கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.
காலியில் இருந்து 65 கடல் மையில் தூரத்தில் குறித்த கப்பல் விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த கப்பலில் இருந்த 7 பேர் தற்போது பாதுகாப்பாக படகொன்றின் மூலம் மீட்கப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய துதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

