கிளிநொச்சி – தொண்டமான்நகர் பகுதியில் நேற்றிரவு 13.7 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
தொண்டமான் நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கஞ்சா பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய குறித்த கேரள கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

