தென்னிலங்கை வான் பகுதியில் அண்மையில் தென்பட்ட பிரகாசமான ஒளி மற்றும் சத்தம் தொடர்பில் பல பிரதேசங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நேரத்தில் தென்னிலைங்கையின் பல பிரதேசங்களில் வீட்டு கூரைகளில் சிறிய ரக கற்கள் விழும் சத்தம் கேட்டமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு பல்கலைகழகத்தின் பௌதீகவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி தென்னிலங்கை வான் பகுதியில் பிரகாசமான ஒளி மற்றும் சத்தம் ஏற்பட்டது.
பின்னர் அது எரிக்கல் வீழ்ச்சி என உறுதிப்படுத்தப்பட்டது.
இருப்பினும் அது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

