இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ,மத்திய, வடக்கு, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனுடன் புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

