நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புத்திசாலித்தனமும்,அனுபவமும் அவசியம – அர்ஜுண ரணதுங்க

278 0

Arijuna-001-610x343நாட்டு பிரச்சினையைத் தீர்த்து சரியான முடிவு எடுப்பதற்கு புத்திசாலித்தனத்துடன் சேர்ந்த அனுபவமும், அறிவும் அவசியம் என துறைமுக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சிறந்த தீர்மானங்களை எடுக்கும் போது படித்த அறிவாளிகளுடன் கலந்தாலோசித்து, அவர்களின் அபிப்ராயங்களையும் பெறும் நடவடிக்கை கடந்த காலங்களில் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு பிரச்சினை மட்டுமல்ல கடற்றொழில் அமைச்சில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் புத்திசாலிகளின் அபிப்ராயங்கள் பெறப்படுவதாகவும், தற்போது துறைமுக அமைச்சில் சிறந்த ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த துறைமுகத்தில் கடந்த காலங்களில் ஊழல், மோசடி என்பன அதிகமாகக் காணப்பட்டதாகவும் அதை நிறுத்த முனையும் போது மோசடிகளில் ஈடுபட்ட அதிகமானோர் துறைமுகத்தின் நடவடிக்கைகளை சீரழிக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை துறைமுகத்தில் மட்;டுமல்ல நாட்டிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அதற்காக சாதாரண மக்களை தெளிவுப்படுத்துவது அவசியம் என்றும் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.