இலங்கையின் ஊடாக ஐ.எஸ் யில் இணைந்தவர்கள் குறித்து விசாரணை

37 0

ISIS_2121034fகேரளாவில் இருந்து இலங்கை ஊடாக சிரியா சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்துக் கொண்டதாக கூறப்படும் 11 பேருக்கு, இந்தியாவில் இயங்கும் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவகத்தினால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

மும்பை புலனாய்வு அதிகாரிகள் இதனைத் தெரிவித்திருப்பதாக, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமாக 21 பேர் இலங்கை ஊடாக சிரியா சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 11 பேர் சிறந்த கல்விமான்கள் என்றும், அவர்களை மூளைச்சலவைக்கு உள்ளாக்கியவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த 21 பேரும் இலங்கையூடாக செல்வதற்கு பின்பற்றிய நடைமுறைகள் முழுமையாக பரிசீலிக்கப்படுவதாக மும்பை புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.