இலங்கையில் சுற்றுலா தொழிலில் ஈடுபடும் 20 பேருக்கு எயிட்ஸ்

52 0

aids_ribbonஇலங்கையில் சுற்றலா தொழிலில் ஈடுபடும் 20 பேருக்கு எயிட்ஸ் தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி 2014இல் 7 பேர், 2015 இல் 5 பேர், 2016இல் 8 பேர் என எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலா வழிகாட்டிகளுக்கு எயிட்ஸ் தொடர்பாக தெளிவூட்டல், இரத்த மாதிரிகளை பரிசோதித்தல், பாதுகாப்பான உறவு தொடர்பில் அறிவூட்டல் போன்ற நடவடிக்கைகள் மூலம் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசு அவதானம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.