பொத்துவட்டன – கஹட்டவில என்னும் பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை கொஸ்வத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தரம் ஒன்றில் கல்வி கற்கும் குறித்த சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் வசித்து வரும் சேர்ந்த 42 வயதான குறித்த நபர் தொலைப்பேசியில் ஆபாச காட்சிகளை காண்பித்து பாலியல் ரீதியாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

