கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடவத்தை, அரசமர சந்திக்கு அருகில் நீர் குழாய் வெடித்ததன் காரணமாக இன்று காலை 9.30 மணி முதல் தொடர்ச்சியாக 12 மணிநேரம் கடவத்தை அண்மித்த பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
கிரிபத்கொட, புஸ்பாராம வீதி, கனேமுல்ல வீதி, ராகம வீதி, கொனஹேன வீதி மற்றும் கடவத்தை நகர் பகுதிகளிலும் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர் குழாய் வெடிப்பு காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கொழும்பு நோக்கிய ஒழுங்கையில் இன்று காலை முதல் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

