இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு ஏப்ரல் மாதம் 3-வது குழந்தை பிறக்கும்

15764 0

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் – இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 3-வது குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மகனான வில்லியம்ஸ் – இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இளவரசி கேத் மிடில்டன் 3-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். கடந்த மாதம் திடீரென வாந்தி மயக்கத்தால் அவதிப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த டாக்டர் அவர் கர்ப்பம் அடைந்து இருப்பதை உறுதிப்படுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் சிசிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு அடுத்த ஆண்டு (2018) ஏப்ரலில் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து கென்சிங்டன் அரச மாளிகை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் பிறக்க இருககும் குழந்தை இங்கிலாந்து அரச குடும்பத்தின் முடி சூட்டும் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளது.

Leave a comment