வெளிநாட்டு மீன்பிடி படகுகள் தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
கடற்றொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற படகுகளை தடை செய்வதுடன், அவற்றுக்கான அதிக அளவான அபராதத்தை விதிப்பதற்கு ஏதுவாக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் மனிதாபிமான அடிப்படையில், இந்திய மீனவர்களின் படகுகள் எவையும் விடுவிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தாம் இந்திய அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

