தலவாக்கலை வாகன விபத்தில் மூவர் படுகாயம்

Posted by - December 9, 2017

தலவாக்கலை – ஹேமசந்திரா மாவத்தையில் இன்று மாலை 4 மணியளவில் இடம் பெற்ற வேன் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கொட்டக்கலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹேமசந்திர மாவத்தையிலிருந்து தலவாக்கலை நகர் நேர்ககி வந்த வாகனம்  வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்திலிருந்த வீடொன்றின் முற்றத்தின் மீது விழுந்தே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே வருடத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் டெங்கு நோயாளர்கள்

Posted by - December 9, 2017

நாட்டில், கடந்த ஓராண்டு காலப் பகுதியில் மட்டும் ஒரு இலட்சத்து 76,248 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், மேல் மாகாணத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் அது 42.93 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 8 ஆயிரத்து 340 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும்

சியம்பலாண்டுவையில் பெய்த கறுப்பு மழை

Posted by - December 9, 2017

சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இன்று (9) முற்பகல் கறுப்பு நிற மழை பெய்துள்ளது மக்களை ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. பெய்த மழை நீர் கறுப்பு நிறத்தில் இருந்ததைக் கண்டு பயந்த மக்கள், அது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், மழை நீரின் மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இயற்கைப் பேரிடர்கள் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், கறுப்பு நிற மழை மக்களை

டிரம்பின் தீர்மானம் தவறு- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

Posted by - December 9, 2017

இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலமை சட்டவிரோதமான முறையில் அறிவித்தமைக்கு   ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலத்தை  அங்கீகரிப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும், பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் இந்தக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு!

Posted by - December 9, 2017

தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்பட்ட, பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. 

பாதீட்டின் 3ம் வாசிப்பு: மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - December 9, 2017

2018ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கான விலையை உறுதியாகப் பேண நடவடிக்கை

Posted by - December 9, 2017

பண்டிகைக் காலத்தில் இறக்குமதி செய்யப்படும் அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கான விலையை உறுதியாகப் பேண நடவடிக்கை எடுத்துள்ளதாக, அத்தியவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

பலஸ்தீனுக்கான ஆதரவு தொடரும் – இலங்கை

Posted by - December 9, 2017

ஐக்கிய நாடுகளின் முழுமையான உறுப்புரிமையை பெற்றுக்கொடுப்பதில் பலஸ்தீனுக்கான தமது ஆதரவினை இலங்கை தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். பலஸ்தீன் குடியரசு கொழும்பில் அதன் புதிய தூதரகத்தை நிர்மாணிப்பதற்காகன காணித்துண்டு ஒன்று இலங்கை அரசினால் நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டது.இந்தக் காணித்துண்டுக்கான உறுதியை இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் சுஹைர் எம்.எச். சயிட்டிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன கையளித்தார்.

பாராளுமன்றத்தில் அமளி துமிளி

Posted by - December 9, 2017

இன்று காலை பாராளுமன்றத்தில் அமளி துமிளி ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றம் குறித்த நேரத்திற்கு முன்னர் கூடியமை குறித்து, தினேஸ் குணவர்த்த எழுப்பிய கேள்வியே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, இன்று மாலை பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.