அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு!

6292 28

தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்பட்ட, பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. 

இது குறித்து கூட்டமைப்பினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அதில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (டெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), ஆகியோர் இன்று (09) ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளோடு எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியதன் படி, எதிர்வரும் தேர்தல் தொடர்பிலான அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான விண்ணப்பங்கள் இலங்கை தமிழரசு கட்சியின் பெயரிலும் சின்னத்திலும் (வீடு) கையளிக்கப்படும்.

வடக்கு கிழக்கிலுள்ள வாக்காளர்களிடம் இலங்கை தமிழரசுக் கட்சியின் கீழ் அதன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவு நல்குமாறு ஆர்வமுடன் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment