டிரம்பின் தீர்மானம் தவறு- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

439 0

இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலமை சட்டவிரோதமான முறையில் அறிவித்தமைக்கு   ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலத்தை  அங்கீகரிப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும், பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் இந்தக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த முடிவு ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானத்துக்கு பொருத்தமற்றது எனவும் அந்நாட்டுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்திய அமைதிக்கு இதனால் நன்மை ஏற்படாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a comment