இராணுவச் சிப்பாய் மின்சாரம் தாக்கி பலி!

Posted by - December 10, 2017

பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். முகாமில் இருக்கும் தடாகத்தில் மின் கோளாரை சரிசெய்து கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இவர் பன்னிப்பிடிய – பெலன்வத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதான இராணுவச் சிப்பாய் ஆகும். சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு!

Posted by - December 10, 2017

வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து 2000 ரூபா வேதனம் அதிகரிக்கப்படும் என, மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். 

ஊடகவியலாளர்கள் மீது இராணுவம் அடாவடி – தடுத்து வைத்து விசாரணை

Posted by - December 10, 2017

முல்லைத்தீவு தண்ணீமுறிப்பு சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம், பொலிஸால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுள்ளனர்.

93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு 14 ஆம் திகதி வரை வேட்­பு­மனு ஏற்பு

Posted by - December 10, 2017

93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நாளை 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி பகல் 12.00 மணி­வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும். தேர்தல் நடை­பெறும் திக­தியை மாவட்ட தேர்தல் தெரி­வத்­தாட்சி அதி­கா­ரிகள் அன்­றைய தினம் அறி­விப்­பார்கள்.

கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிரணி இன்னும் முழுமைபெறவில்லை!

Posted by - December 10, 2017

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிரணி இன்னும் முழுமைபெறவில்லையென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு எதிராக செயற்படுபவர்களை இனியும் பார்த்திருக்க முடியாது- சிறிசேன

Posted by - December 10, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கு உழைக்காத ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் அரசியல் யாப்புக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ ல.சு.கட்சியை பிரிப்பதற்கோ, பலவீனப்படுத்துவதற்கோ யாருக்கும் தான் இடமளிக்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக செயற்படும் போது தான் இனியும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்

ஊழல் மோசடிகள் தொடர்பில் பேச அரசுக்கு உரிமையில்லை-மக்கள் விடுதலை முன்னணி

Posted by - December 10, 2017

தேசிய அரசாங்கத்திற்கு ஊழல் மோசடிகள் தொடர்பில் பேசுவதற்கோ கடந்த ஆட்சியில் மோசடியில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கோ உரிமையில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த மோசடியிலும் ஈடுப்படாமல் இருந்தாலும் அவர்கள் ஊழல் மோசடியில் இருந்து விடுப்பட்டவர்களாக முடியாது. அரசாங்கம் ஊழல் செய்தவர்களையும் ஊழல் மிக்க அரசாங்கம் ஒன்றையும் பாதுகாக்க முயற்சிக்குமானால், அதன் பொறுப்பை அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் அனைவரும் ஏற்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின்

நல்லாட்சி அரசாங்கம் டிசம்பர் 31 உடன் முடிவுறுமா? இரு பக்கத்திலும் அழுத்தம்

Posted by - December 10, 2017

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை எதிர்வரும் 31 ஆம் திகதியின் பின்னர் இன்னும் இரு வருடங்களினால் நீடிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக கொண்டு வந்து வெற்றி பெறச் செய்வதற்கு கடந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறி தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாகவுள்ளவர்கள் இந்த விடயத்தில் மத்தியஸ்தம் வகிப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியி செயற்குழு உறுப்பினர்களில்

இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் கைது

Posted by - December 9, 2017

வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை நெளுக்குளம் பொலிஸார் நேற்று  மாலை கைது செய்துள்ளனர். நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி, காத்தான் கோட்டம், தாஸ்கோட்டம், ஊர்மிளா கோட்டம், கூமாங்குளம் போன்ற பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி ஏ. எம். எஸ். அத்தநாயக்க அவர்களின் தலமையிலான பொலிஸ் குழு குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது நேற்று