நல்லாட்சி அரசாங்கம் டிசம்பர் 31 உடன் முடிவுறுமா? இரு பக்கத்திலும் அழுத்தம்

241 0

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை எதிர்வரும் 31 ஆம் திகதியின் பின்னர் இன்னும் இரு வருடங்களினால் நீடிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக கொண்டு வந்து வெற்றி பெறச் செய்வதற்கு கடந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறி தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாகவுள்ளவர்கள் இந்த விடயத்தில் மத்தியஸ்தம் வகிப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இருப்பினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியி செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் நல்லிணக்க உடன்படிக்கையை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த உடன்படிக்கை முறிவுற்றால், அரசிலமைப்பு நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என மத்தியஸ்த குழு தெரிவித்து வருவதாகவும் அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.

Leave a comment