ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

Posted by - December 29, 2017

ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி நாளை (சனிக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு தேசிய விற்பனையாளர்களின் ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்திருந்தது. குறித்த தடையின் காரணமாக ரஷ்யாவிற்கான ஏற்றுமதி கடந்த இரண்டு வாரங்களாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரஷ்யாவின் தொழில்நுட்ப குழுவொன்று அடுத்த வருட முற்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு இலங்கையின் தேயிலை

ஜி.எஸ்.பி வரிச் சலுகை இந்த ஆண்டுடன் நிறுத்தப்படுகிறது

Posted by - December 29, 2017

ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச் சலுகை இந்த ஆண்டுடன் நிறுத்தப்படுவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி) 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதியுடன் காலாவதியாகின்றது. அடுத்த ஆண்டுக்கான ஜி.எஸ்.பியின் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை. இதன் விளைவாக ஜி.எஸ்.பி இவ்வாண்டுடன் காலாவதியாவதனால், இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து

இலவசமாக வழங்கப்படும் பாடசாலைப் புத்தகங்கள் விற்பனைக்கு ! – வெளியீட்டு ஆணையாளர் மறுப்பு

Posted by - December 29, 2017

இலவசமாக வழங்கப்படும் பாடசாலைப் புத்தகங்களை விற்பனை செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானதென கல்வி அமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.இலங்சிங்ஹ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியீட்டு ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில்; குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் பல்வேறு குழுக்களை தூண்டுவதன் மூலம் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டினார். இந்த வருடத்தில் பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்காக 3 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளது. அரச அச்சுத் திணைக்களத்தில்

எரிபொருள் இருப்பை தக்கவைக்க புதிய முயற்சி

Posted by - December 29, 2017

கொழும்பு கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலை அமைந்துள்ள பகுதியில் மேலும் 10 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கும் பணிகள் கனியவளத்துறை அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை அமைச்சரவை அனுமதியுடனேயே ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறித்த திட்டத்தின் கீழ் 11,200 மெட்ரிக் தொன் கொள்ளளவுள்ள 3 எண்ணெய் தாங்கிகளும், 11,900 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட விமான எரிபொருள் தாங்கியொன்றும், 11,600 மெட்ரிக் தொன் டீசல் தாங்கியொன்றும், 5,800 மெட்ரிக் தொன் டீசல்

புத்தளம் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - December 29, 2017

எட்டு கிலோவும் 100 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் தலைமையக நச்சு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை புத்தளம் பொலிஸ் பிரிவில் எருக்கலம்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரங்குளி, விரிதோடை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சைக்கிள் ஒன்றில் கேரளா கஞ்சா பொதியை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்

மட்டக்குளிய துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர் கைது

Posted by - December 29, 2017

கடந்த நவம்பர் 30 ஆம் திகதி மட்டக்குளிய பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு குற்றித்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய மட்டக்குளிய பிரதேசத்தினை சேர்ந்த குறித்த நபர் நேற்று மாலை முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்து கொண்டிருந்த வேளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – அதிகாரிகள் கண்டனம்

Posted by - December 29, 2017

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 03 நாட்களாக, பல்கலைக்கழக ஒலுவில் வளாக நிருவாக கட்டடத்துக்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை தமது கடமைகளைச் செய்யவிடாது இடையூறுகளை விளைவித்து வருவதை கண்டித்து, பல்கலைக்கழக அதிகாரிகள் நிருவாக கட்டடத்தை விட்டு இன்று வேளியேறி தமது கண்டனத்தை தெரிவித்துள்ளதாக, உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். கடந்த ஓகஸ்ட் மாதம் பொறியியல் பீட மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சுமார் 20 பேர் வைத்தியசாலையில்

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சீருடைகளை மாற்ற நடவடிக்கை

Posted by - December 29, 2017

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரின் சீருடைகளை மாற்றுவது குறித்து சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன கவனம் செலுத்தியுள்ளார். இதற்குரிய கருத்துக்களை நடத்துவதற்கும் , ஆலோசனைகளையும் சமர்ப்பிப்பதற்கும் துறைசார்ந்த தொழிற் சங்கங்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். சுகாதாரத்துறை சார் உத்தியோகத்தர்களின் சீருடைகளில் காலோசிதமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அமைச்சரின் நிலைப்பாடாகும். தொழிற்சங்க அமைப்புக்களின் யோசனைகள் கிடைத்ததும், பேச்சுவார்த்தை நடத்தி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என சுகாதார

மத்திய வங்கியின் கடுமையான நிதிக்கொள்கையால் பணவீக்கம் வீழ்ச்சியடையும் – குமாரசுவாமி

Posted by - December 29, 2017

அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணய கையிருப்பு டிசம்பர் மாத இறுதியளவில் 7.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இதனை தெரிவித்தார். மத்திய வங்கி வெளிநாட்டு நாணயச்சந்தையில் 1.7 பில்லியன் அமெரிக்க பெறுமதியான டொலர்களை கொள்வனவு செய்தமை ஹம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கை பணிகளை கையளித்தமைக்காக சீன நிறுவனம் வழங்கிய கொடுப்பனவு மற்றும் 2017 ஆம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுத்தளத்தை நிலைப்படுத்தக் கூடாது என்பதில் தமிழரசுக்கட்சி திட்டமிட்டு சதி!

Posted by - December 29, 2017

சில சம்பவங்கள் நடைபெறும்போது அதன் எதிர்வினைக்கு செயலாற்றும்போது அதன் ஊடாக பல உண்மைகள் வெளிவருவதுண்டு. அப்படித்தான் சுமந்திரன் தனது