மத்திய வங்கியின் கடுமையான நிதிக்கொள்கையால் பணவீக்கம் வீழ்ச்சியடையும் – குமாரசுவாமி

298 0

அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணய கையிருப்பு டிசம்பர் மாத இறுதியளவில் 7.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இதனை தெரிவித்தார்.

மத்திய வங்கி வெளிநாட்டு நாணயச்சந்தையில் 1.7 பில்லியன் அமெரிக்க பெறுமதியான டொலர்களை கொள்வனவு செய்தமை ஹம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கை பணிகளை கையளித்தமைக்காக சீன நிறுவனம் வழங்கிய கொடுப்பனவு மற்றும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிகளின் 4ஆவது தொகுதி கிடைத்தமை மேலும் வலுவடைவதற்கும் வெளிநாட்டு நாணய இருப்பு அதிகரிப்புக்கும் காரணமாக அமைந்ததாக ஆளுனர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக 2015 ஆம் மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பற்றாக்குறையுடன் காணப்பட்ட தேசிய உத்தியோகபூர்வ இருப்பின் அளவில் குறைந்தமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இது 2017 ஆம் ஆண்டில் மேலதிக தொகையை கொண்டதாக வளர்ச்சி அடையும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி சுட்டிக்காட்டினார்.

இதற்கமைவாக தற்போது நிலவும் சகல மட்ட பொருளாதார சூழ்நிலை தொடர்பில் கவனம் செலுத்தும் போது தற்போது முன்னெடுக்கப்படும் நிதிக் கொள்கையின் ஸ்திரத்தன்மை சிறந்ததாகும் என்று டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற மத்திய வங்கியின் நிதிச்சபைக் கூட்டத்தில் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் மாற்றத்தை ஏற்படுத்தாது .தற்போதைய நிலையை முன்னெடுப்பதற்கும் இதன் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டின் முதல் 10 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானம் 11.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வரி மூலமான வருமான அதிகரிப்பே. இவ்வருடத்தில் ஜனவரி முதல் ஓக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் வரி மூலமான வருமானம்; 1370.3 பில்லியன்கள் ஆகும். 2016 ஆம் ஆண்டில் வரி மூலமான வருமானம் 1199.9 பில்லியன் ரூபாவாகும் என்றும் ஆளுனர் தெரிவித்தார்.

தற்போது அதிகரித்துள்ள பணவீக்கம் மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படும் கடுமையான நிதிக் கொள்கை நடவடிக்கையின் காரணமாக அடுத்தாண்டு முதல் காலாண்டு பகுதியில் வீழ்ச்சியடையக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a comment