இன்று நண்பகலுக்குள் சேவைக்கு வாருங்கள் !- சிவப்பு அறிவித்தல்

Posted by - December 11, 2017

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் இன்று (11) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் சேவைக்கு சமூகமளிக்காதவிடத்து சம்பந்தப்பட்ட சகல ஊழியர்களும் சேவையிலிருந்து நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 12 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 2600 ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

93 சபைகளுக்கான வேட்பு மனு இன்று முதல் ஏற்பு

Posted by - December 11, 2017

உள்ளுராட்சி சபைகள் 93 இற்கான வேட்பு மனுக்கள் ஏற்பு இன்று (11) முதல் ஆரம்பமாகின்றது. இதன்படி, 07 மாநகர சபைகள், 18 நகர சபைகள் மற்றும் 68 பிரதேச சபைகள் என்பவற்றுக்கு இவ்வாறு வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. இந்த நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை இடம்பெறவுள்ளது. வேட்பு மனுக்கள் குறித்த பதிவு செய்யப்பட்ட கட்சி ஒன்றின் செயலாளர் அல்லது அதிகாரம் வழங்கப்பட்ட நபர் ஒருவரினால் கையளிக்கப்பட வேண்டும். அல்லாதவிடத்து

ரயில்வே ஊழியர்கள் கேட்டதைக் கொடுத்தால் எமக்கும் தேவை- சுகாதார தொழிற்சங்கம்

Posted by - December 11, 2017

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் அதிகரித்தால், அந்த சம்பள அதிகரிப்பை சுகாதாரத் துறையிலுள்ள பிரிவுகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய அறிவித்துள்ளார். ரயில்வே ஊழியர்கள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் நடவடிக்கையினால் பொதுமக்கள் படும் சிரமங்களுக்கு அளவில்லை. இதுபோதாமைக்கு சுகாதாரத் துறையும் இவ்வாறான அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை அரசாங்கத்துக்கு நெருக்கடியாகவே அமையும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாகும்.

ஐ.தே.க.வின் கெஸ்பேவ தொகுதி இரண்டாகியது- ஒரு குழு சுயாதீனம்

Posted by - December 11, 2017

கெஸ்பேவ தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களிடையே பிரிவினை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தலில் கட்சியின் ஒரு குழு சுயாதீனமாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அக்கட்சியின் இளைஞர் பிரிவு இவ்வாறு விலகுவதற்குத் தீர்மானித்துள்ளது. தொகுதி அமைப்பாளர் தொடர்பில் ஏற்பட்ட உடன்பாடின்மை இவர்கள் கட்சியிலிருந்து வெளிநடப்புச் செய்வதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர், உப தலைவர், பொருளாளர் மற்றும் முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பலரும் இவ்வாறு சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நீதிபதி இளஞ்செழியனிற்கு இடமாற்றம்

Posted by - December 11, 2017

நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று யாழ். நீதிமன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். “யாழ்ப்பாணத்துக்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தையும் பொறுப்பையும் நிறைவேற்றிவிட்டேன். மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கான இடமாற்றம் விரைவில் எனக்கு வரும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுந்திரக்கட்சியுடன் இணைந்து போட்டியிட வாய்ப்பில்லை – மஹிந்த

Posted by - December 11, 2017

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் கூட்டு எதி­ரணி இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்கு வாய்ப்பு இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல்; பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவது எப்படி? – ரொபட் அன்ரனி

Posted by - December 11, 2017

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்­க­லுக்­கு­ரிய தினங்கள் விரைவில் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளன. கட்­சிகள் தற்­போது தேர்­த­லுக்கு மும்­மு­ர­மாக தயா­ரா­கி­வ­ரு­கின்­றன. இம்­முறை தேர்­த­லா­னது புதிய முறையில் நடை­பெ­ற­வுள்­ள­மையே விசேட அம்­ச­மா­க­வுள்­ளது.

மஹிந்த ராஜ­பக் ஷ அணி குறித்து அஞ்­ச­வில்லை!

Posted by - December 11, 2017

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அணி குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அச்­சப்­ப­டலாம். ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு இந்த இரண்டு கட்­சிகள் தொடர்­பிலும் எவ்­வி­த­மான அச்­சமும் கிடை­யாது. ஆகவே மக்­க­ளிடம் சென்று தேசிய அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசிய கட்­சியின் உண்­மை­யான பங்­க­ளிப்பை கூறுங்கள்.

வாள்களுடன் வந்த இருவர் பொலிஸார் மீது தாக்குதல் : வவுனியாவில் சம்பவம்

Posted by - December 11, 2017

வவுனியா, பசார் வீதியில் மோட்டர் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசாரை தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

எம்.எச்.எம்.சல்மான் தனது உறுப்­பினர் பத­வியை இன்று இரா­ஜி­னாமா செய்­ய­வுள்ளார்!

Posted by - December 11, 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது உறுப்­பினர் பத­வியை இன்று இரா­ஜி­னாமா செய்­ய­வுள்ளார்.