இலஞ்சம் பெற்ற போக்குவரத்துப் பொலிஸார் மூவர் சிறையில்

Posted by - December 15, 2017

வீதி விபத்தொன்று தொடர்பில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்த சாரதி அனுதிப் பத்திரமொன்றை சட்ட விரோதமாக பெற்றுக் கொள்வதற்கு 3000 ரூபா இலஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொல்கஹவில போக்குவரத்துப் பிரிவில் உள்ள பொலிஸார் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் குருணாகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (15) குருணாகல் மஜிஸ்ட்ரேட் சம்பத் ஹேவாவசம்

இலாபமீட்டும் நிறுவனமாக இ.ஒ. கூட்டுத்தாபனத்தை மாற்றுவேன் – புதிய தலைவர் சிதி பாரூக்

Posted by - December 15, 2017

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு பௌதீக, மனித வளங்களையும் நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் சிதி பாரூக் தெரிவித்தார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிதி பாரூக் பதவியேற்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது உறையற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஊடக அமைச்சர் தன்மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கி வைத்தமைக்கு நன்றி தெரிவித்த அவர் கூட்டுத்தாபனத்தை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணத்துடன் அனைவரும் செயற்படவேண்டும்

ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் – கடற்படைத் தளபதி சந்திப்பு

Posted by - December 15, 2017

இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அட்சுஹிரோ மோரோரே மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் புதிய கடற்படை தளபதிக்கு ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கடற்படை தளபதியுடன் கலந்துரையாடியுள்ளார். இதேவேளை சந்திப்பின் இறுதியில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் விளையாட்டு அமைச்சருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - December 15, 2017

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார். அவர் விளையாட்டமைச்சராக இருந்த காலப்பகுதியில் முறையற்ற விதத்தில் உழைத்த நிதியை கொண்டு கொழும்பு கின்ஸி வீதி பகுதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது

இந்த நிலையில்தான் ஜெ. அனுமதிக்கப்பட்டார்! -அப்போலோ துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி

Posted by - December 15, 2017

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படுக்கை நிலையில்தான் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என அப்போலோ துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேட்டியளித்துள்ளார்.

தமிழ்ப் பெண்ணை நாடு கடத்த வேண்டாம்! – அவுஸ்ரேலியாவிடம் ஐ.நா குழு கோரிக்கை

Posted by - December 15, 2017

இலங்கைத் தமிழ் பெண்ணை நாடு­க­டத்த வேண்டாம் என அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்­திடம் ஐக்­கிய நாடுகள் சபையின் சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது என கார்­டியன் பத்­திரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கனடாவில் தமிழ்ப் பெண் அடித்துக் கொலை- கணவன் கைது!

Posted by - December 15, 2017

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கனடாவில் அடுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பகமுவ பிரதேசத்தை மூன்றாக பிரிப்பதற்கு எதிரான மனு பிற்போடப்பட்டது

Posted by - December 15, 2017

அம்பகமுவ, பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியை மூன்று பிரிவுகளாக பிரித்து எல்லை நிர்ணயிக்கப்பட்டு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் பிற்போடப்பட்டுள்ளது. 

கலுபோவிலயில் வீட்டில் ஏற்பட்ட தீயினால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

Posted by - December 15, 2017

கொஹுவல, கடவத்தை வீதி, கலுபோவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டின் மேல் மாடியில் உள்ள அறை ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது அந்த அறையில் இருந்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 57 வயதுடைய சிறு மனநோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரே உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன்,

பரீட்சைக்கு தோற்றச்சென்ற இரு மாணவர்கள் கைது !

Posted by - December 15, 2017

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காகச் சென்ற இரு மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.