கலுபோவிலயில் வீட்டில் ஏற்பட்ட தீயினால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

10640 11

கொஹுவல, கடவத்தை வீதி, கலுபோவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டின் மேல் மாடியில் உள்ள அறை ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது அந்த அறையில் இருந்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

57 வயதுடைய சிறு மனநோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரே உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment