தமிழ்ப் பெண்ணை நாடு கடத்த வேண்டாம்! – அவுஸ்ரேலியாவிடம் ஐ.நா குழு கோரிக்கை

432 0

இலங்கைத் தமிழ் பெண்ணை நாடு­க­டத்த வேண்டாம் என அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்­திடம் ஐக்­கிய நாடுகள் சபையின் சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது என கார்­டியன் பத்­திரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இலங்கை தமிழ் பெண் ஒரு­வரை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி நாடு கடத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களைக் குடி­வ­ரவுத் துறை மேற்­கொண்­ட­தா­கவும் அவ­ரது அகதி விண்­ணப்பக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது. இவ­ரது விண்­ணப்பம் விரைவுப் பரி­சீ­லனை முறை மூலம் ஆரா­யப்­பட்ட பின்னர் அகதிக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

இப்பெண் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கு உத­வினார் என இவ­ருக்­கெ­தி­ராக திறந்த பிடி­யாணை இலங்­கையில் வலு­வாக உள்­ள­தா­கவும் இவர் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­படும் பட்­சத்தில் கைது செய்­யப்­படும் ஆபத்தும் பாலியல் வல்­லு­றவு உட்­பட்ட சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­படும் நிலை காணப்­ப­டு­வ­தா­கவும் ஜெனி­வாவை தள­மா­கக்­கொண்ட சித்­த­ிர­வ­தை­க­ளுக்கு எதி­ரான 10 பேர் கொண்ட குழு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள் ளதாக கார்டியன் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment