முன்னாள் விளையாட்டு அமைச்சருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

1416 94

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.

அவர் விளையாட்டமைச்சராக இருந்த காலப்பகுதியில் முறையற்ற விதத்தில் உழைத்த நிதியை கொண்டு கொழும்பு கின்ஸி வீதி பகுதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது

Leave a comment