கனடா நாட்டின் பணக்கார தம்பதியினரின் மர்ம மரணம்: போலீஸார் அதிர்ச்சி

Posted by - December 16, 2017

கனடா நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களான பேரி ஷெர்மன், மனைவி ஹனி ஷெர்மன் தம்பதியினர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் புதிராக உள்ளது என்றும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்றும் கனடா போலீஸார் தெரிவித்துள்ளனர். கனடாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான அபோடெக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பேரி ஷெர்மன் ஆவார். இந்நிலையில் இவர் மற்றும் இவரது மனைவியின் உடல் டொராண்டோ நகர் வடகிழக்குப் பகுதியில் போர்வை ஒன்றில் சுற்றப்பட்டு அவர்கள் இல்லத்திலிருந்து அகற்றப்பட்டு, அனாமதேய வேன் ஒன்றில்

இந்தோனேஷியா ஜாவா தீவுகள் அருகில் பலமான நிலநடுக்கம், ஒருவர் பலி

Posted by - December 16, 2017

இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகள் அருகே நேற்று நள்ளிரவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், கடலில் 2 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவில் நேற்றிரவு 11.47 மணியளவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்ட்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 62 வயது முதியவர் ஒருவரும் 80 வயது மூதாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இது நமது அரசாங்கம்தான் என்றாலும் அதற்குள் நாம் பலமாக இருக்க வேண்டும்!

Posted by - December 16, 2017

இது நாங்கள் உயிரை கொடுத்து போராடி உருவாக்கிய அரசாங்கம். எங்கள் மக்கள் வாக்களித்து உருவாக்கிய அரசாங்கம்.

சிலாபம் நகரசைபைத் தேர்தலில் குதித்த தமிழ்ப்பெண் நீதிபதி

Posted by - December 16, 2017

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.சிவபாதசுந்தரம்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை பெற்று எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கோரிக்கைக்கு ஏற்ப ஆசனப்பங்கீடு இடம்பெறாவிட்டால் தேர்தலிலிருந்து விலகுவோம்-ந.ஶ்ரீகாந்தா

Posted by - December 16, 2017

திருகோணமலை நகரசபைத் தேர்தலில் தமது கோரிக்கைக்கேற்ப ஆசனப் பங்கீடு மேற்கொள்ளப்படாவிட்டால் குறித்த நகர சபைக்கான தேர்தலில் இருந்து விலகவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் திருகோணமலை நகர சபைத் தேர்தலில் டெலோ சார்பில் இரு வேட்பாளர்களுக்கான ஆசன ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் இணக்கம் காணப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார். எனினும் தற்போது தமது கட்சிக்கு ஒரு ஆசனத்தினை வழங்குவதாக இலங்கை தமிழரசுக்

கணவனிடமிருந்து மனைவியை பாதுகாக்க புதிய சட்டம்!

Posted by - December 16, 2017

இலங்கையில் மனைவியின் விருப்பமின்றி அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் நடவடிக்கைக்கு உள்ளாக்குதல் தண்டனைக்குரிய குற்றமாக கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கையின் நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இது தொடர்பான சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்படவுள்ளன. கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்தத் தகவலினைத் தெரிவித்துள்ளார். குறித்த சட்டத் திருத்தம் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

16 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - December 16, 2017

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறீய முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் வழங்கிய உத்தரவுக்கமையவே ஊர்காவற்றுறை நீதிமன்றால் குறித்த 16 இந்திய மீனவர்களும் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். மேலும் குறித்த இம் மீனவர்கள் அனைவரும் கடந்த 2017.08.31 மற்றும் 2017.09.12 ஆகிய திகதிகளில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் கவலை இல்லாமல் வாழ்கின்ற நிலமையை ஜ.தே.கட்சியே உருவாக்கியது!- ரவி

Posted by - December 16, 2017

நாட்டில் மக்கள் எந்த கவலையும் இல்லாமல் வாழ்கின்ற நிலமையை ஜக்கிய தேசிய கட்சியே உருவாக்கியுள்ளதாக அமைச்சர் ரவிகருணநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஜக்கிய தேசிய கட்சியானது வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தது. இந்நிகழ்விற்கு வந்திறிருந்த அமைச்சர் நிகழ்வின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இவ் உள்ளுராட்சி தேர்தலானது யாழ்ப்பாணத்தில் ஒர் முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகின்றது. இ லங்கை பொறுத்தவரையில் முழு நாட்டிலும்

பூனை கடித்து ஒருவர் மரணம் – மனைவி சந்தேகத்தில் கைது

Posted by - December 16, 2017

பூனையொன்று கடித்ததன் காரணமாக விஷமேறிய நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 14 ஆம் திகதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அயல் வீட்டில் இருந்த வந்த பூனையொன்று கடித்துள்ளது. அதன்பின்னர் அவர் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மனைவி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தொடர்பான மரண விசாரணைகள் நடத்தப்பட்டதன் அடிப்படையில்

முதலமைச்சரின் காணிப் பிணக்கு கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்துள்ளனர்

Posted by - December 16, 2017

வட மாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக முதலமைச்சரும், மாகாண காணி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச செயலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் உள்ள அரச காணிகள் தொடர்பான பிணக்குகள் மற்றும் மக்களுடைய காணிகளை வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்றன அபகரிப்பதனால் எழும் பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இன்றைய கூட்டம் முதலமைச்சரினால் ஒழுங்கமைக்கப்பட்டது. எனினும், பல பிரதேச செயலர்கள் மற்றும் வனவள திணைக்களம், வனஜீவராசிகள்