போதை மாத்திரைகளுடன் அம்பாறையில் ஒருவர் கைது!

Posted by - December 20, 2017

பெருந்தொகை போதை மாத்திரைகளுடன் அம்பாறையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காரொன்றில் 23,400 போதை மாத்திரைகளுடன் பயணித்த போதே, இவர் இவ்வாறு கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவராகும். இவரை அம்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ: சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

Posted by - December 20, 2017

மெக்சிகோவின் குயிண்டானா பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சர்வதேச அறிவியல் போட்டி: துபாயில் வசிக்கும் சென்னை மாணவருக்கு வெண்கலப் பதக்கம்

Posted by - December 20, 2017

நெதர்லாந்தில் நடந்த சர்வதேச அறிவியல் போட்டியில் பங்கேற்ற துபாயில் வசிக்கும் சென்னை மாணவர் வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பஸ் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து

Posted by - December 20, 2017

மட்டக்களப்பு, சத்திருக் கொண்டான் பிரதேசத்தில்  தனியார் பஸ்வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பஸ்வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் . மட்டக்களப்பு கூளாவடி பிரதான வீதி 6 ஆம் பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய யாதவன் மகாரிசி என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயரிழந்துள்ளார் . இச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் சம்பவதினமான

மோட்டார் வாகனங்களில் ‘கிராஷ் கார்டு’ பொருத்தினால் கடும் நடவடிக்கை

Posted by - December 20, 2017

கார்கள், இருசக்கர வாகனங்களில் ‘கிராஷ் கார்டு’ அல்லது ‘புல் பார்’ என்று அழைக்கப்படும் தடுப்புக் கம்பிகள் பொறுத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நுவரெலியாவில் அடை மழை

Posted by - December 20, 2017

நுவரெலியா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்து வருகின்றதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலவாக்கலை, அட்டன், கொட்டகலை, டயகம, எல்ஜின் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்வதோடு கடும் பனி மூட்டமும் நிலவுகின்றதுடன் தலவாக்கலை பிரதேசத்தில் மின்சார விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. மேலும் அட்டன் – நுவரெலியா, அட்டன் – கினிகத்தேனை,

என் தந்தைக்கு வைத்த குறிக்கு பெரியபாண்டியன் பலி: தேஜாராமின் மகள்-மகன்

Posted by - December 20, 2017

‘என் தந்தைக்கு வைத்த குறிக்கு பெரியபாண்டியன் பலியாகிவிட்டார்’ என்றும், ‘இருட்டில் தவறுதலாக குண்டு பாய்ந்ததால் இந்த சம்பவம் நடந்துவிட்டது’, என்றும் தேஜாராமின் மகள் மற்றும் மகன் கூறியுள்ளனர்.

மெக்சிகோ பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

Posted by - December 20, 2017

மெக்சிகோவில் தனது மகன் படிக்கும் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.