மோட்டார் வாகனங்களில் ‘கிராஷ் கார்டு’ பொருத்தினால் கடும் நடவடிக்கை

226 0

கார்கள், இருசக்கர வாகனங்களில் ‘கிராஷ் கார்டு’ அல்லது ‘புல் பார்’ என்று அழைக்கப்படும் தடுப்புக் கம்பிகள் பொறுத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநில போக்குவரத்துச் செயலாளர், கமிஷனர்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கார்கள், இருசக்கர வாகனங்களில் ‘கிராஷ் கார்டு’ அல்லது ‘புல் பார்’ என்று அழைக்கப்படும் தடுப்புக் கம்பிகள் அங்கீகாரமற்ற முறையில் பொருத்தப்படுவதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்.
அந்த தடுப்பு கம்பிகளை பொருத்துவது, பாதசாரிகளுக்கும், வாகனத்தில் செல்வபவர்களின் பாதுகாப்புக்கு உகந்ததாக இல்லை. இதைப் பொருத்துவது, மோட்டார் வாகன சட்டத்தின் 52-ம் பிரிவை மீறுவதாக அமைகிறது. அது அந்த சட்டத்தின் 190 மற்றும் 191-ம் சட்டப் பிரிவுகளின்படி தண்டனைக்கு உரிய குற்றமாகும்.
எனவே ஒவ்வொரு மாநில அரசும் இந்த தடுப்புகம்பிகள் பொருத்துவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment