நெல்லியடியில் கஞ்சாவுடன் சிக்கிய நபர்!!

Posted by - December 30, 2017

யாழ். நெல்லியடி மாலுசந்திப் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபரிடமிருந்து 4 கிலோகிராம் கஞ்சா நெல்லியடிப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

Posted by - December 30, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாநகர சபையில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்சானந்தின் ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் பல்கலைக்கழம் அண்மித்த பகுதிகளில் அதாவது தர்சானந் போட்டியிடும் தொகுதியில் அவருடைய போஸ்டர்களை ஓட்டிக் கொண்டிருந்த ஆதரவாளர்களே வீதியால் ரோந்து சென்ற பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் இன்று நீதிமன்றில்

திருகோணமலை விபத்தில் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

Posted by - December 30, 2017

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஜெயபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 24 மற்றும் 53 வயதுடைய நபர்களே விபத்துக்குள்ளாகி உள்ளார்கள். கிண்ணியா பிரதேசத்தில் இருந்து தம்பலகாமம் நோக்கி இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணித்த அவ்விருவரும் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முட்பட்ட வேளையில் எதிரே வந்த பெற்றோலிய பவுசருடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக தம்பலகாமம்

தேர்தல் வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக விக்னேஸ்வரன் அறிக்கை விடுவது வழமை-தமிழரசுக் கட்சி

Posted by - December 30, 2017

கடந்த 27ம் திகதி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தொடர்பிலும், அதன் தலைமை தொடர்பிலும் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு தமிழரசுக் கட்சி பதில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தேர்தல்கள் வரும்போது விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அறிக்கை வெளியிடுவது வழமை. அவ்விதமான ஒன்றே கடந்த 27ம் திகதியன்று அவரால் வெளியிடப்பட்ட

குழந்தையை பிரசவித்த தாய் டெங்கு நோயால் உயிரிழப்பு

Posted by - December 30, 2017

2017 ஆம் ஆண்டில் யாழ் குடாநாட்டில் டெங்கு நோயாளர்கள் 5783 பேர் இனங்காணப்பட்டதாகவும், அதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க. நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகரப் பகுதி, சாவகச்சேரி, உடுவில், சண்டிலிப்பாய், தெல்லிப்பளை ஆகிய இடங்கள் டெங்கு நோயால் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளந்தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மீசாலை மேற்கைச் சேர்ந்த

விஷேட புகையிரத சேவை

Posted by - December 30, 2017

பாடசாலை விடுமுறைக் காலம் முடிவுக்கு வந்துள்ளதாலும், புத்தாண்டை முன்னிட்டும் பொது மக்களின் நலன் கருதி விசேட ரயில் சேவை இடம் பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க இதனைக் கூறினார். எதிர்வரும் ஜனவரி 7ம் திகதி வரை விசேட ரயில் சேவை நடைபெறவுள்ளதாக அவர் கூறினார். கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை பண்டாரவளை பிரதேசங்களுக்கும் செல்லும் பயணிகளின் நலன் கருதி இந்த ரயில் சேவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை

வேட்பாளர்களாக தண்டனைக்குரிய குற்றவாளிகள்

Posted by - December 30, 2017

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 32 பேர் தண்டனைக்குரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக்கும் சுயேச்சைக் குழுவொன்றின் ஆய்வொன்றிலேயே இது தெரியவந்துள்ளது. இதையடுத்து, குறித்த வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் மேற்படி கண்காணிப்புக் குழு கையளித்துள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், நிதி மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களில் மேற்படி வேட்பாளர்கள் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தேர்தல் சமயத்தில் இவர்கள் குறித்து கடும் கண்காணிப்புடன்

பல ஆயிரக்கணக்கான மக்கள் சூழ, புதிய ஆயர் வரவேற்பு!!

Posted by - December 30, 2017

மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்று  காலை பணிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கு இன்று காலை மன்னாரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆமோக வரவேற்பினை வழங்கினர். மன்னார்-தள்ளாடி சந்தியில் வைத்து மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரான பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ வரவேற்கப்பட்டு மன்னார்-தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி

கஞ்சா கடத்திய இந்தியர் உட்பட நால்வர் கைது!!!

Posted by - December 30, 2017

காக்கைத்தீவு வடக்கில் சட்டவிரோதமாக கேரள கஞ்சாவினை கடத்திய இந்தியர் உட்பட நால்வரை நேற்று இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 39 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.இவ் ஆண்டில் மட்டும் கடற்படையினரால் 949 கிலோ கஞ்சா கைப்பற்றப்ட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

விபத்தில் 2816 பேர் மரணம்

Posted by - December 30, 2017

நடப்பு ஆண்டில் இதுவரை 2816 பேர் வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக வீதிப் பாதுகாப்பு தேசிய சபை தெரிவித்துள்ளது.வாகன விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, முச்சக்கர மற்றும் கார் விபத்துக்களில் பலியானோரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விடக் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.