ஆசிய சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்

Posted by - November 3, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதலாவது ஆசிய சுற்றுப் பயணத்தை இன்று ஆரம்பிக்கிறார். இதன்படி இன்று அவர் ஜப்பான் செல்கிறார். அதன் பின்னர் தென்கொரியா, சீனா, வியட்நேம் மற்றும் ஃபிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் அவர் இந்த நாடுகளுக்கான விஜயங்களை மேற்கொள்ளவுள்ளார். 25 வருடங்களின் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு நீண்ட வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்கின்றார். இதேவேளை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ஜப்பான் ஜனாதிபதி

தந்தையின் வாகனத்தில் மோதி குழந்தை பலி

Posted by - November 3, 2017

வீரகெடிய – அத்தநயால பிரதேசத்தில் தந்தையின் சிற்றூந்தில் மோதுண்டு சிறிய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த நபரின் 4 வயது மகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இன்று காலையே இந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளதுடன், சிற்றூந்தின் சில்லில் சிக்கி சிறுமி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மேலும் நீடிப்பு

Posted by - November 3, 2017

அரசியல் யாப்பு குறித்த வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் நாடாளுமன்ற அரசியலமைப்பு பேரவையில் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றது. இந்த விவாதம் தொடர்ச்சியாக எதிர்வரும் 8ம் திகதியும் நடைபெறும் என்று சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - November 3, 2017

இந்தியாவின் மூன்று பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இந்தியக் கடற்படைக் கப்பல்களான திர் மற்றும் சுஜாதா என்பனவும், இந்திய கடலோர பாதுகாப்பு கப்பலான சாரதியும் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. நல்லெண்ண மற்றும் பயிற்சிகள் நோக்கில் இந்த கப்பல்கள் அங்கு நங்கூரமிட்டிருப்பதாக, இலங்கை கடற்படையினரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - November 3, 2017

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஜேன் லெம்பர்ட் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமைய மீண்டும் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்திருந்த விடயங்களில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய சட்டம் அமுலாக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். ஆனால் இந்த விடயத்தில் முன்னேற்றம் இல்லாதிருப்பது அதிருப்தி அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிணை முறி விநியோக மோசடி ஆணைக்குழுவில் பிரதமர்

Posted by - November 3, 2017

பிணை முறி விநியோக மோசடிகள் குறித்த விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் முன்னிலையாவார் என்று தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. அதிகாரக் காலம் நீடிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று மீள ஆரம்பிக்கப்பட்டன. இந்த பிணை முறி விநியோகம் குறித்து ஏலவே பிரதமரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் எழுத்துமூல பதில்களை வழங்கி இருந்தார். இதுதொடர்பில் மேலதிக தெளிவினைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவரை விசாரணைக்கு அழைக்கவிருப்பதாக ஆணைக்குழு தெரிவித்திருந்தது. இதன்படி அவர்

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற பதவி முன்னாள் அமைச்சருக்கு

Posted by - November 3, 2017

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற பதவி, முன்னாள் அமைச்சர் பியசேனவிற்கு வழங்கப்படவுள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர் என்ற அடிப்படையில், கீதாகுமாரசிங்கவினால் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை, உயர் நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பு கிடைக்கப்பெற்றதும், அவரது பதவி வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் பியசேனவின் பெயர் பரிந்துரைக்கப்படும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதேநேரம், கீதாகுமாரசிங்கவிற்கு பதிலாக நியமிக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினரின் பதவியேற்பானது,

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம்மிக்க கூட்டம் இன்று

Posted by - November 3, 2017

எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம்மிக்க கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு மகிந்த அணியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுசெயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது அணியைச் சேர்ந்த 42 பேரின் கைச்சாத்துடனான கடிதம் ஒன்று நேற்று சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் துமிந்த திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாணவரை தாக்கிய அதிபர் கைது

Posted by - November 3, 2017

மாத்தறை – ஊரபொக்க தேசிய பாடசாலையின் அதிபரை காவற்துறையினர் கைது செய்தனர். பாடசாலை மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கியமைக்காக அவர் தைகானார். இந்த முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர் ஒருவர் மீது அவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவர் தமது தலைமயிரை அதிகமாக வளர்த்திருந்தமைக்காக அதிபரால் தாக்கப்பட்டதுடன், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

741 பொதுமக்களுக்கு மரண தண்டனை

Posted by - November 3, 2017

ஈராக்கின் மோசுல் நகரில் குறைந்தபட்சம் 741 பொதுமக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன் தீவிரவாதிகள் மிகப்பெரிய அளவிலான மனித கடத்தல்களையும் நடத்தி இருப்பதுடன், பொதுமக்களை மனித கேடயங்களாகவும் பயன்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஈராக்கிய படையினர் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் {ஹசைன் இதனைத்