ஆசிய சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்

230 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதலாவது ஆசிய சுற்றுப் பயணத்தை இன்று ஆரம்பிக்கிறார்.

இதன்படி இன்று அவர் ஜப்பான் செல்கிறார்.

அதன் பின்னர் தென்கொரியா, சீனா, வியட்நேம் மற்றும் ஃபிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் அவர் இந்த நாடுகளுக்கான விஜயங்களை மேற்கொள்ளவுள்ளார்.

25 வருடங்களின் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு நீண்ட வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்கின்றார்.

இதேவேளை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ஜப்பான் ஜனாதிபதி க்சீ ஜின்பின்னுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment