பிணை முறி விநியோக மோசடிகள் குறித்த விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் முன்னிலையாவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
அதிகாரக் காலம் நீடிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று மீள ஆரம்பிக்கப்பட்டன.
இந்த பிணை முறி விநியோகம் குறித்து ஏலவே பிரதமரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் எழுத்துமூல பதில்களை வழங்கி இருந்தார்.
இதுதொடர்பில் மேலதிக தெளிவினைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவரை விசாரணைக்கு அழைக்கவிருப்பதாக ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இதன்படி அவர் அடுத்தவாரம் அளவில் விசாரணைக்கு முகம் கொடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

