கைத்துப்பாக்கியுடன் சென்றதாகக் கூறப்படும் பொலிஸார் இருவர் வீதியோரம் நின்றிருந்த இளைஞனை அச்சுறுத்தி அவரது மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. “3 மணித்தியாலங்களின் பின்னரே அதனைப் பொலிஸ் நிலையத்தில் வைத்துத் தந்தனர்.குறித்த மோட்டார் சைக்கிளுடன் 3 மணித்தியால இடைவேளையில் பொலிஸார் ஏதாவதுசிக்கலுக்குரிய விடயங்களைச் செய்திருந்தால் எமக்கே சிக்கல் வரும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு என்ன நடவடிக்கை?”இவ்வாறு பாதிக்கப்பட்ட தரப்பினர் கேள்வியெழுப்புகின்றனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் நேற்று முற்பகல் இடம்பெற்றது.பாதிக்கப்பட்ட தரப்பினர் காரைநகரைச் சேர்ந்தவர்கள். “நான்