யாழ்ப்பாணத்தில் சிவில் உடை பொலிசாரின் அச்சுறுத்தலால் பதற்றம்!!

315 0

கைத்­துப்­பாக்­கி­யு­டன் சென்­ற­தா­கக் கூறப்­ப­டும் பொலி­ஸார் இரு­வர் வீதி­யோ­ரம் நின்­றி­ருந்த இளை­ஞனை அச்­சு­றுத்தி அவ­ரது மோட்­டார் சைக்­கி­ளைப் பறித்­துச் சென்­ற­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

“3 மணித்­தி­யா­லங்­க­ளின் பின்­னரே அத­னைப் பொலிஸ் நிலை­யத்­தில் வைத்­துத் தந்­த­னர்.குறித்த மோட்­டார் சைக்­கி­ளு­டன் 3 மணித்­தி­யால இடை­வே­ளை­யில் பொலி­ஸார் ஏதா­வதுசிக்­க­லுக்­கு­ரிய விட­யங்­க­ளைச் செய்­தி­ருந்­தால் எமக்கே சிக்­கல் வ­ரும். இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு என்ன நட­வ­டிக்கை?”இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னர் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­ற­னர்.

இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் ஐந்து சந்­தி­யில் நேற்று முற்­ப­கல் இடம்­பெற்­றது.பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னர் காரை­ந­க­ரைச் சேர்ந்­த­வர்­கள். “நான் நண்­பர்­க­ளு­டன் வீதி­யோ­ரம் மோட்­டார் சைக்­கி­ளில் நின்­றி­ருந்­த­போது, இரண்டு பேர் மோட்­டார் சைக்­கி­ளில் வந்து எமக்கு அரு­கில் நிறுத்­தி­னர். தாங்­கள் துப்­பாக்கி வைத்­தி­ருக்­கின்­றோம் என்­று­கூ­றி­ய­வாறு துப்­பாக்கி இடுப்­பில் சொருகி வைக்­கப்­ப­டும் பகு­தி­யில் கை வைத்­த­னர். மோட்­டார் சைக்­கி­ளைத் தரு­மாறு அச்­சு­றுத்­தி­னர். பயத்­தில் கொடுத்­தோம். யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யத்­துக்­கு­ வந்து பெற்­றுச் செல்­லு­மா­று­கூ­றி­ய­வாறு அந்த இடத்­தி­லி­ருந்து தமது மோட்­டார் சைக்­கிளை எடுத்­துக் கொண்டு சென்­று­விட்­ட­னர்” என்று மோட்­டார் சைக்­கி­ளைப் பறி­கொ­டுத்த தரப்­பி­னர் தெரி­வித்­த­னர்.

“அது குறித்து முறை­யிட யாழ்ப்­பாண மாவட்ட பிர­திப் பொலிஸ்மா அதி­பர் அலு­வ­ல­கத்­துக்­குச் சென்­றோம். அங்கு அவர் இல்லை. வடக்கு மாகாண மூத்த பிர­திப்பொலிஸ்மா அதி­பர் அலு­வ­ல­கத்­துக்­குச் சென்­றோம். யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யத்­துக்­குச் செல்­லு­மாறு அவர் கூறி­னார்.

அதன்­படி யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யத் துக்­குச் சென்­ற­போது அங்கு எமது மோட்­டார் சைக்­கி­ளைக காண­வில்லை. அத­னால் அங்கு காத்­தி­ருந்தோம். மதி­யம் 2.30 அள­வில் குறித்த மோட்­டார் சைக்­கிள் பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதன்­பின்­னர் எம்­மி­டம் தந்து அனுப்­பி­விட்­ட­னர். அது குறித்து நாம் முறைப்­பாடு பதிவு செய்­ய­வுள்­ள­தா­கக்­கூ­றி­ய­போ­தும் அவர்­கள் அதனை ஏற்­க­வில்லை.

அவர்­கள் எமது வாக­னங்­களை இவ்­வாறு வாங்­கிச் சென்று குற்­றஞ்­செ­யல்­க­ளில்ஈடு­பட்­டால் தமக்­குத் தான் பாதிப்பு வரும். சிவில் உடை­யில் குறித் இரண்டு பொலி­ஸா­ரும் எமது மோட்­டார் சைக்­கி­ளைப் பறித்­துச் சென்­றி­ருந்­த­னர். எங்­கா­வது விபத்து அல்­லது அடி­தடி இடம்­பெற்­றால் எதிர்த் தரப்­பி­னர் குறித்த மோட்­டார் சைக்­கிள் இலக்­கத்­தைக் குறித்து வைத்­தி­ருந்­தால் தமக்கே பாதிப்பு பல வகை­க­ளி­லும் வரும். இது குறித்து மேல­திக நட­வ­டிக்­கை­யைக் கோவுள்­ளோம்” என்று பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மேலும் தெரி­வித்­த­னர்.

Leave a comment

Your email address will not be published.