சந்தையிலுள்ள இறைச்சி வகையின் பயன்பாடு குறித்து மக்கள் அவதானம்

Posted by - November 5, 2017

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு நோய்களுக்கு உட்பட்ட மிருகங்கள் இறைச்சிக்காக சந்தைக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச மிருக வைத்தியர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக அறுப்பதற்காக கொண்டு செல்லப்படும் மாடு, ஆடு, பன்றி போன்றவற்றுக்கு கடந்த பல வாரங்களாக சுகாதார சான்றிதழ் விநியோகிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால், உணவுக்காக சந்தையில் வைக்கப்பட்டுள்ள கால்நடை இறைச்சி வகைகளின் சுகாதாரத் தன்மை சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளதாகவும் அரச மிருக வைத்தியர்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர்

Posted by - November 5, 2017

இலங்கை கிரிக்கெட் அணிக்கான புதிய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலான் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பொறுப்பில் இவர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றுவதாக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. திலன் துசார சமரவீர (பிறப்பு: 22 செப்டம்பர் 1976, கொழும்பு) அல்லது சுருக்கமாக திலன் சமரவீர என அழைக்கப்படும் இவர், இலங்கை  அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 1998 ஆம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இந்திய அணிக்கெதிரான

கோப் குழுவின் தலைவரை மாற்ற அரசாங்கத்துக்குள் சதி?

Posted by - November 5, 2017

அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் (கோப்) தலைவராகவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுன்னெத்திக்குப் பதிலாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை நியமிக்க சிரேஷ்ட அமைச்சர்களிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் பாராளுமன்ற கூட்டத் தொடர்களை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. பாராளுமன்ற கூட்டத் தொடர்களை ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் கூட்டத்தை ஆரம்பிக்கும் போது சபைகள் அனைத்துக்கும் புதிய

பாவனைக்குதவாத தேயிலை கடத்திய 6 பேர் வரக்காபொலயில் கைது

Posted by - November 5, 2017

பாவனைக்குதவாத ஒரு தொகை தேயிலையை எடுத்துச் செல்லும் போது வரக்காபொல தும்மலதெனிய பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் ஆறு பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் பேரில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று வாகனங்களில் 18 ஆயிரத்து 550 கிலோகிராம் தேயிலையை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டோர் கைது

Posted by - November 5, 2017

கூரிய ஆயுதங்களை காண்பித்தும் பொதுமக்களை காயப்படுத்தியும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐவர் அத்துருகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவர்கள் தடுப்பு விசாரணை உத்தரவிற்கமைய காவல்துறையினரால் அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அத்துருகிரிய பகுதியில் ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களின் வசமிருந்த 5 வாள்கள், ரிவோல்வர் துப்பாக்கி,தோட்டாக்கள், போலி துப்பாக்கி

மக்களுக்காக அர்ப்பணிப்புடன் இயங்கும் அரசாங்கம்

Posted by - November 5, 2017

சிறு பிரிவினரின் பிரசாரங்களுக்கு மத்தியில் அதிகமானோருக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை நிறுத்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்காக உள்ள நவீன தொழில்நுட்பத்தை பிழையாக பயன்படுத்தும் சிலர் இன்று அரசாங்கம் தொடர்பில் பல்வேறு பிழையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். சுதந்திரமான சூழலிலும், சிலர் இவ்வாறு செயற்படும்போதும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பொறுப்பேற்ற பணிகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சுனாமி-  முன்னெச்சரிக்கை

Posted by - November 5, 2017

இன்றைய தினம் நாடு முழுவதிலும் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாடொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பலி இதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள கரையோர பிரதேசங்களில் இந்த முன்னெச்சரிக்கை தெளிவூட்டல் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய குறித்த பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் தற்காலிகமாக வெளியேற்றப்படுவதுடன், இதற்காக காலநிலை அவதான நிலையத்தின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த தெளிவூட்டல் செயற்பாடு ஒரு

வடக்கு கிழக்கு இணைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் விருப்பம்- சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - November 4, 2017

வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து முஸ்லிம் கட்சிகள் பேசத் தயாராகவுள்ள நிலையில், முஸ்லிம் கட்சிகளைக் காரணம் காட்டி அரசாங்கத்திடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்காமல் இருப்பது அக்கட்சிக்கு  மக்களுக்கு வழங்கிய ஆணையை புறக்கணிக்கும் ஒரு நடவடிக்கையாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கை இணைக்கப் போவதில்லையென்றும், ஒற்றையாட்சியின் கீழால் தான் அரசியல் யாப்பு அமையும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு வழங்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருப்பதை

ஹம்பாந்தோட்டை துறைமுகம் – டிசம்பர் முதல் சீனா நிறுவனத்திடம்

Posted by - November 4, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் சீனா நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளது. இந்த துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை அண்மையில் சீன நிறுவனம் ஒன்றுடன் செய்து கொள்ளப்பட்டது. இதற்கமைய குறித்த நிறுவனம் சீனாவிற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் பொறுப்பளிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் பெறப்படும் வருமானத்தின் மூலம் இலங்கையின் கடன்தொகையை அடைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தவறிழைக்கின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - November 4, 2017

வெளிப்படைத் தன்மையுடன்கூடிய அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எலஹர பக்கமூன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். பெருந்தொகை நிதி ஒதுக்கீட்டில் நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில், இவற்றின் வெளிப்படைத்தன்மையை உச்சளவில் பேணுவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடியை எதிர்த்து தான் கடந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த அரசாங்கத்தில் எவ்வித அரசியல் பேதங்களுமின்றி