பாவனைக்குதவாத தேயிலை கடத்திய 6 பேர் வரக்காபொலயில் கைது

6886 15

பாவனைக்குதவாத ஒரு தொகை தேயிலையை எடுத்துச் செல்லும் போது வரக்காபொல தும்மலதெனிய பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் ஆறு பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் பேரில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று வாகனங்களில் 18 ஆயிரத்து 550 கிலோகிராம் தேயிலையை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Leave a comment