வடக்கு கிழக்கு இணைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் விருப்பம்- சுரேஷ் பிரேமச்சந்திரன்

349 0

வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து முஸ்லிம் கட்சிகள் பேசத் தயாராகவுள்ள நிலையில், முஸ்லிம் கட்சிகளைக் காரணம் காட்டி அரசாங்கத்திடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்காமல் இருப்பது அக்கட்சிக்கு  மக்களுக்கு வழங்கிய ஆணையை புறக்கணிக்கும் ஒரு நடவடிக்கையாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை இணைக்கப் போவதில்லையென்றும், ஒற்றையாட்சியின் கீழால் தான் அரசியல் யாப்பு அமையும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு வழங்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் இருப்பதாகவே கூறிவருகின்றார். அவர் வடக்கு கிழக்கு இணைப்புக்கு தாம் குறுக்காக இருக்க மாட்டோம் என்றே அவர் தெரிவித்து வருவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறினார்.

Leave a comment