தவறிழைக்கின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

6036 14

வெளிப்படைத் தன்மையுடன்கூடிய அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எலஹர பக்கமூன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

பெருந்தொகை நிதி ஒதுக்கீட்டில் நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில், இவற்றின் வெளிப்படைத்தன்மையை உச்சளவில் பேணுவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடியை எதிர்த்து தான் கடந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த அரசாங்கத்தில் எவ்வித அரசியல் பேதங்களுமின்றி தவறிழைக்கின்றவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதை பிரதான பண்பாக கருதி செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment