வேட்பாளர்களை தெரிவு செய்ய பின்பற்றவேண்டியவை

Posted by - November 7, 2017

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மார்ச் 12 அமைப்பினால் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பிலான விபரங்கள் அடங்கிய கடிதங்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த கடிதத்தில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான சீரான வழிமுறைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நான்கு அம்ச கோரிக்கைகளையும் அந்த கடிதத்தில் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 01. வேட்பாளரை தெரிவு செய்யும் போது மார்ச் 12 அமைப்பின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி தெரிவு செய்தல் வேண்டும். 02. வேட்பாளர்களை

பெற்றோல் அதிகூடிய விலைக்கு விற்பனை

Posted by - November 7, 2017

நாட்டின் பல பிரதேசங்களின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகாமையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை விநியோகிக்குமாறு எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கவில்லை என கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.​ வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோலை விநியோகிக்குமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அமைச்சினால் விசேட சுற்று நிரூபம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையல் , குறித்த அறிவித்தல் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்

யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் சுடர்வணக்க நிகழ்வும் சமகால அரசியல் கலந்துரையாடலும்.

Posted by - November 7, 2017

தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக களத்திலும் அரசியல் தளத்திலும் அயராது உழைத்த உன்னத உயிர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள். பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் உயிர்நீத்த ஏனைய 6 மாவீரர்களின் நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் சுடர்வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் வீரவரலாற்றை நினைவுகூரும் வகையில் வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வாளர்களால் கவிதைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலில் சிறிலங்காவின் உத்தேச புதிய அரசியல் யாப்பு

கல்முனை மாநகர சபையினை பிரிப்பதன் மூலம் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க சதி! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 7, 2017

கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையானது கல்முனையில் வாழ்கின்ற தமிழர்கள் எப்போதும் முஸ்லிம்களின் ஆட்சிஇ அதிகாரத்தின் கீழ் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற திட்டத்திற்கான கோரிக்கையாக காணப்படுகின்றது. எனவே கல்முனை மாநகர சபையினை பிரிக்கின்ற விடயத்தில் சாய்ந்தமருதை தனியாக பிரித்துக் கொடுத்துவிட்டு எஞ்சிய பிரதேசங்களை ஒரு சபையாக அமைக்குமாறு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் என்பதற்கு அமைவாக கல்முனை மாநகர

யாழ்ப்பாணத்தில் கனமழை: 125 பேர் முகாம்களில் தஞ்சம்!

Posted by - November 7, 2017

அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர், பிரதீப் கொடிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த 125 பேரில், சுமார் 70 பேர் வரை வல்வெட்டித்துறை – பொலிகண்டி பொது நோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே பலாலி நலன்புரி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்ததுடன் தற்போது அவர்கள் இவ்விடத்தில், தங்க வைக்கப்பட்டுள்ளனர் . இதேவேளை இவர்கள் யுத்த காலத்தில் பலாலி பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு

Posted by - November 7, 2017

நாட்டில் மழை காரணமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதன் நீர்மட்டம் நான்கு மீற்றர்கள் உயருமானால் மின் உற்பத்தி கருவிகள் தானாக இயங்கத் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய மலை நாட்டின் ரிவர்ஸ்டன், நக்கிள்ஸ் மலைத்தொடர்களில் அடைமழை பெய்கிறது. இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் நிரம்பியுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு 187 மீற்றர் உயரமானது. இதில் நீர்மட்டம் 174 மீற்றர் வரை உயர்ந்தால் மின் உற்பத்திக் கருவிகள் தானாக இயங்கும். தற்போது நீர்மட்டம்

மன்னாகண்டல் குளம் உடைந்தது! மக்களுக்கு பாதிப்பில்லை! விவசாயத்துக்கு நீர் இல்லை என மக்கள் கவலை!

Posted by - November 7, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்துக்குட்ப்பட்ட மன்னாகண்டல் குளம் நேற்று (6) அதிகாலை உடைந்து நீர் முழுவதும் வீன்விரயமாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது இந்த குளம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூபா 1940000 பெறுமதியில் ஆழப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு 2015 ஆம் ஆண்டு ரூபா1898928.57 பெறுமதியில் துருசு பகுதியிலிருந்து வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு இரண்டு தடவையில் மொத்தமாக ரூபா 3838928.57 பெறுமதியான நிதியில் அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை வேளையில் துருசு பகுதியில்

ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட 8 பேர் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - November 7, 2017

திவுலுபிட்டியில் விசேட அதிரடிப்டையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று மினுவங்கொடை நீதவான் திலனி சதுரன்தி பெரேரா முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பஸ் விபத்து : இரு குழந்தைகளின் தந்தை பலி

Posted by - November 7, 2017

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி பெரியகல்லாற்றில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளின் தகப்பன் சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்துள்ளார். மின்சார சபையில் கடமைபுரியும் பெரியகல்லாற்றை சேர்ந்த இரண்டு பிள்ளை தந்தையான நடேசன் வயசு 37 என்பவரே குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவராவார். கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, போக்கவரத்திற்கு சபைக்கு சொந்தமான பஸ்வண்டி பிரயாணிகளை ஏற்றுவதற்காக நிறுத்திய போது, அதன் பின்னர் மோட்டார்

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர் பதவியேற்பு

Posted by - November 7, 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி விலகியநிலையில் இன்று அந்தக் கட்சி சார்பில் புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் பதவியேற்றார். வடக்கு மாகாண சபையின் 109வது அமர்வு யாழ் கைத்தடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (7) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையகத்தால் நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் அவைக்கு அழைக்கப்பட்டதுடன்