மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு

370 0

நாட்டில் மழை காரணமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதன் நீர்மட்டம் நான்கு மீற்றர்கள் உயருமானால் மின் உற்பத்தி கருவிகள் தானாக இயங்கத் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய மலை நாட்டின் ரிவர்ஸ்டன், நக்கிள்ஸ் மலைத்தொடர்களில் அடைமழை பெய்கிறது. இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் நிரம்பியுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு 187 மீற்றர் உயரமானது. இதில் நீர்மட்டம் 174 மீற்றர் வரை உயர்ந்தால் மின் உற்பத்திக் கருவிகள் தானாக இயங்கும். தற்போது நீர்மட்டம் 170 மீற்றராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment